சிறுவயதில் நம்மில் பலரும் குதிரை வண்டி, மாட்டு வண்டி அல்லது ஒட்டக வண்டிகளில்  சவாரி செய்திருப்போம்; ஆனால் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் 4 நாய்களை வைத்து ஒரு சிறுவன் செய்துள்ள வினோதமான நாய் வண்டி (Dog Cart) சவாரி வீடியோ சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆச்சரியத்தையுமே கிளப்பியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ‘fitdharmendra’ என்ற பக்கத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த அதிரடி வீடியோவில், நான்கு நாய்கள் ஒரு சிறிய மர வண்டியுடன் இணைக்கப்பட்டு, அந்த வண்டியின் மீது ஒரு சிறுவன் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு சாலையில் உல்லாசமாகச் சவாரி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வினோதமான மற்றும் சுவாரசியமான காட்சியைச் சாலையில் கடந்து செல்லும் பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து ரசிப்பதும் அதில் தெளிவாகத் தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Fit Dharmendra (@fitdharmendra)

இந்த  வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் தங்களது கலவையான கருத்துக்களைத் தாறுமாறாக அள்ளி வீசி வருகின்றனர். அதில் ஒரு பயனர், “இந்தச் சிறுவன் நிஜமாவே என்னோட சிறுவயது கனவைத்தான் பாஸ் வாழ்ந்துட்டு இருக்கான்!” என்று எமோஷனலாகக் குறிப்பிட, மற்றொருவரோ “குதிரை வண்டியைக் கேள்விப்பட்டிருக்கோம், ஆனா நாய் வண்டியை இப்பதான் பார்க்குறோம்” என்று ஜாலியாகக் கலாய்த்துள்ளார்.

அதே நேரத்தில், சில நெட்டிசன்கள் அந்த நாய்களின் பாதுகாப்பு மற்றும் அவை இழுப்பதால் ஏற்படும் சோர்வு குறித்தும் தங்களது  கவலைகளையும் கேள்விகளையும் ஓப்பனாக எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ எந்த ஏரியாவில் எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் துல்லியமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தற்பொழுது  சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த லேட்டஸ்ட் ட்ரெண்டிங் செய்தி, “சிறுவனின் இந்த ஐடியா நிஜமாவே ஒரு மெகா கிரியேட்டிவிட்டி .. ஆனா வாயில்லா ஜீவன்களையும் கொஞ்சம் பத்திரமா சோர்வில்லாம பார்த்துக்கணும்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் இணையத்தில் அள்ளிக்கொட்டும் கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸ் தாறுமாறாக விவாதிக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.