சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் ஆற்றில் நீந்திக்கொண்டே செல்போனில் மூழ்கியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பெண் லைஃப் ஜாக்கெட் அணிந்து, ஆற்று நீரோட்டத்துடன் தனது முதுகைப் படிய வைத்து மிதந்தபடி, செல்போனைப் பார்த்து ரசித்துக்கொண்டே செல்கிறார்.

தண்ணீருக்குள் செல்போனைப் பயன்படுத்துவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்பதால், இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘குந்தன் பட்டேல்’ என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், செல்போன் மீதான இந்த அதீத ஈர்ப்பு தேவையற்ற ஆபத்தை அழைப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள், வெறும் கண்டென்ட்டிற்காக உயிரைப் பணயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது எதிர்பாராமல் பாறைகளில் மோதினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால், பாதுகாப்புதான் முக்கியம் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“>

 

ஆக்கப்பூர்வமான வீடியோக்களை உருவாக்குவதில் தவறில்லை, ஆனால் அதைவிடத் தற்காப்பு உணர்வு மிகவும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இணையத்தின் மீதான மோகம், ஒருவரின் அடிப்படைப் பாதுகாப்பைக் கூட மறக்கச் செய்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.