ஜப்பானில் பிரசவத்திற்காகச் சென்ற கர்ப்பிணி இஸ்லாமிய பெண் ஒருவர், தனக்குப் பெண் மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அடம் பிடித்து அடுத்தடுத்து 7 மருத்துவமனைகளுக்கு அலைந்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின்படி ஒரு பெண் தனது முகத்தையோ அல்லது உடலையோ மாற்று மதத்தைச் சேர்ந்த ஆண் மருத்துவரிடம் காட்ட அனுமதி இல்லை என்று அந்தப் பெண்ணின் கணவர் பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனால், ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கிய அந்தத் தம்பதியினர், ஜப்பானிய மருத்துவக் கட்டமைப்புக்கே ஒரு சவாலாக மாறியுள்ளனர்.
இந்த தம்பதியினரின் கடுமையான நிபந்தனைகளைக் கேட்டு பொறுமையிழந்த ஜப்பான் மருத்துவர் ஒருவர், “ஒருவேளை நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டால், அந்த நேரத்தில் ஆண் மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அங்கு குடியேறும் இஸ்லாமியர்கள் தங்களின் கடுமையான மதக் கோட்பாடுகளை ஜப்பானின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் மீதும் திணிக்க முயல்வதாகப் பலரும் தங்களது கண்டனங்களையும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
