ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள உர்சுலைன் இண்டர் காலேஜில் (Ursuline Inter College), மூக்குத்தி அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக இந்து மாணவி ஒருவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி மூக்குத்தி அணிந்திருந்ததைக் கண்ட கல்லூரியின் முதல்வர், “உன் மூக்குத்தியைக் கழற்று. நீ ஒரு இந்து, நீ ஒரு பிகாரி… உனக்கெல்லாம் படிப்பதற்கு தகுதியே இல்லை!” என்று மிகக் கொடூரமான முறையில் சாடி, அந்தப் பெண்ணின் மத மற்றும் பிராந்திய அடையாளத்தை அசிங்கப்படுத்திப் பேசியுள்ளார்.
"Remove your nose ring. You are Hindu, You are Bihari… you don’t have the right to study!"
This is what the Principal of Ursuline Inter College, Ranchi told a Hindu girl before expelling her just for wearing a nose ring.
When the girl politely said she’ll consult a doctor… pic.twitter.com/zoMuHX200z
— Team Hindu United (@TeamHinduUnited) July 1, 2026
கல்லூரி முதல்வரின் இந்த அநாகரிகமான பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, நிலைமையைச் சமாளிக்க “நான் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு இந்த மூக்குத்தியைக் கழற்றிவிடுகிறேன்” என்று மிகவும் பணிவாகக் கூறியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண்ணின் விளக்கத்தை ஏற்க மறுத்த கல்லூரி நிர்வாகம், அவரைத் தொடர்ந்து அவமானப்படுத்தியதோடு கல்லூரியிலிருந்தும் வெளியேற்றியுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் ஒரு மாணவியின் இந்து மற்றும் பிகாரி அடையாளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த அநீதி, தற்போது மக்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
