பெங்களூருவில் உள்ள கேப்கெமினி டெக்னாலஜி சர்வீசஸ் (Capgemini Technology Services) அலுவலகத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகளுக்கான தினசரி பராமரிப்பு மையத்தில் (Daycare), பச்சிளம் குழந்தைகள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களின் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வார்கள் என நம்பி விட்டுச் சென்ற இடத்தில், அந்த மழலையர்கள் கடுமையான உடல்ரீதியான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Absolute Horror ! Toddlers who were left at a daycare facility in Bengaluru's Capgemini Technology Services office were allegedly subjected to physical abuse, punished by locking them in bathrooms, faucets sprayed on thier faces and much more. FIR registered, investigation on. pic.twitter.com/CbnGcdcAUs
— Deepak Bopanna (@dpkBopanna) July 1, 2026
அங்கிருந்த ஊழியர்கள், அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தண்டனை என்ற பெயரில் இருண்ட கழிவறைக்குள் (Bathrooms) பூட்டி வைத்தும், அவர்களின் முகத்தில் குழாய் தண்ணீரை (Faucets) அநாகரிகமாகப் பீய்ச்சியடித்தும் கொடூரமான முறையில் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் பெற்றோர்களின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு (FIR) செய்துள்ளனர். பிஞ்சு என்றும் பாராமல் குழந்தைகளுக்கு நரக வேதனையைக் காட்டிய இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
