கோவில் படிக்கட்டு ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு சுவாரசியமான பரிசோதனை, இந்திய சமூகத்தில் மூடநம்பிக்கை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இளைஞர் ஒருவர் விளையாட்டாகக் கோவில் படிக்கட்டின் கூரையைத் தொட்டுவிட்டுச் செல்ல, அதைத் தற்செயலாகப் பார்த்த மற்ற மக்கள், அந்த இடத்தில் ஏதோ தெய்வீக சக்தி இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்தப் படிக்கட்டு கூரையைத் தொட்டுக் கும்பிடத் தொடங்கியுள்ளனர். ஒரு சாதாரண மனிதனின் செயல், அடுத்த சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த கூட்டத்தையும் மூடநம்பிக்கையில் மூழ்கடித்து, அந்த இடத்தையே புனிதமான ஒன்றாக மாற்றிய விநோதம் அரங்கேறியுள்ளது.

​இந்த வைரல் பதிவு, மக்கள் எப்படி எந்தவொரு கேள்வியும் கேட்காமல் குருட்டுத்தனமாக ஒரு விஷயத்தை நம்புகிறார்கள் என்பதைக் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இத்தகைய கலாச்சார பலவீனங்களைத்தான் அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறது.