பெண் பார்க்கச் சென்ற இடத்தில், பெண்ணின் சருமம், தலைமுடி ஆகியவற்றை ஆராய்ந்து, அவரது முகத்திரையையும் விலக்கி ஒரு பொருளைப் போல சோதித்த மாப்பிள்ளை வீட்டாருக்கு, அந்தப் பெண்ணின் தாய் கொடுத்த அதிரடி பதிலடி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தன் மகள் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்த அந்தத் தாய், சற்றும் யோசிக்காமல் மாப்பிள்ளையிடம், “அப்படியே உன் பேண்ட்டையும் கழட்டு, நாங்களும் கொஞ்சம் சோதித்துப் பார்க்கணும்” என ஆவேசமாக வெடித்தார்.
ஒரு பெண்ணை இப்படி அணு அணுவாக ஆராயலாம் என்றால், அதே விதிமுறை ஏன் ஒரு ஆணுக்கும் பொருந்தக்கூடாது என்ற அவரது அதிரடி கேள்வி, மாப்பிள்ளை வீட்டாரை நிலைகுலைய வைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, பேண்ட்டைக் கழற்ற மறுத்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக ஓட்டம் பிடித்துள்ளார். இந்தியத் திருமணங்களில் பெண்ணை மட்டும் ஒரு பொருளாகப் பார்க்கும் இந்த இரட்டை நிலைக்கு எதிராக அந்தத் தாய் எடுத்த இந்த அதிரடி முடிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
