2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, அதிமுக – பாஜக கூட்டணியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, தனது பாணியில் பதிலளித்துள்ளார்.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதேசமயம், ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் இறுதி முடிவெடுப்பார் எனத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

மேலும், திமுகவைச் சாடிய அவர், “திமுக எப்போதுமே அதிமுகவின் திட்டங்களை காப்பி அடிப்பது தான் வழக்கம். எங்களுடைய ‘குலவிளக்கு’ திட்டத்தைத்தான் இப்போது திமுக காப்பி அடித்து வருகிறது” என அதிரடியாக விமர்சித்தார்.