கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வர்ணனையாளர்களின் வழக்கம். ஆனால், வங்கதேச பிரீமியர் லீக் போட்டியின் போது ரமீஸ் ராஜாவுக்கு நேர்ந்த அனுபவம் அவரை ஒரு நிமிடம் ஆடிப்போக வைத்துள்ளது.
போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின் போது, கேப்டன்களுடன் நின்றிருந்த ரமீஸ் ராஜா, ரசிகர்களைப் பார்த்து “தயவுசெய்து கொஞ்சம் சத்தம் போடுங்கள், வாருங்கள்” (Make some noise, come on!) என்று உற்சாகமாக கத்தினார்.
View this post on Instagram
ஆனால், அவர் எதிர்பார்த்த ஆரவாரத்திற்குப் பதில், மைதானம் முழுவதும் மயான அமைதியே நிலவியது. ஒரு சிலரது குரல்கள் மட்டுமே மெலிதாகக் கேட்ட நிலையில், ரமீஸ் ராஜா ஒரு நொடி தர்மசங்கடத்திற்கு ஆளானார்.
பின்னர் சுதாரித்துக்கொண்டு, வீரர்களிடம் பேச்சைத் தொடர்ந்தார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
“ரமீஸ் ராஜாவுக்கு விழுந்த நோஸ்கட்” என்றும் “இதென்ன ஒரு கொடுமை” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், ரசிகர்கள் இன்னும் மைதானத்திற்குள் முழுமையாக வராதது அல்லது மைதானத்தின் ஒலி அமைப்பு போன்ற காரணங்களால் ரசிகர்கள் இதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சிலர் அவருக்கு ஆதரவாகக் கூறி வருகின்றனர்.
