2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் விளையாட வேண்டிய “சி” பிரிவில் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர வங்கதேசம் முரண்டு பிடித்து வருவது இப்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாக, ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியில் உள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், “நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம், எங்களை இலங்கை பிரிவுக்கு மாற்றுங்கள்” என ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், இந்தக் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த ஐசிசி, “வரும் 21-ம் தேதிக்குள் இந்தியா வருகிறீர்களா இல்லையா என்பதைச் சொல்லுங்கள்” என டெடுலைன் கொடுத்துள்ளது. ஒருவேளை வங்கதேசம் வர மறுத்தால், அவர்களுக்குப் பதில் ரேங்கிங் அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி களமிறங்கும் என ஐசிசி அதிரடி காட்டியுள்ளது.
