அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விவகாரம், தற்போது டெல்லி தேர்தல் ஆணையம் வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி எடுத்து வருகிறது. அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் இன்பதுரை, “சுயலாபத்திற்காக மட்டுமே அந்த 6 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அந்தத் தொகுதிகள் ஏதோ தானாகவே காலியானது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, திட்டமிட்டு சதி செய்து சித்தரித்துள்ளனர்” என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

​மேலும் பேசிய அவர், இந்த விவகாரத்தில் சட்ட வித மீறல்கள் மற்றும் குதிரை பேரங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளதால், அந்த 6 தொகுதிகளிலும் தற்போதைக்கு இடைத்தேர்தல் எதையும் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் மிகத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிய விவகாரத்தை டெல்லி வரை கொண்டு சென்று, தேர்தல் ஆணையத்திடமே நேரடியாக அதிமுக இந்த அதிரடிப் புகாரை வாசித்துள்ளது, தவெக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூடாரங்களையுமே தற்பொழுது பயங்கர அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.