மும்பை புறநகர் பகுதியான விராரில் உள்ள சந்தன்சார் சந்தையில், காய்கறிகளைச் சுத்தம் செய்ய சாக்கடை நீரைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான செயல் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்தையில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

அங்குள்ள பெண் ஒருவர், சாலையோரத்திலுள்ள சாக்கடை நீரை அள்ளி, அதன் மூலம் காய்கறிகளைக் கழுவும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில், பகிரங்கமாக இத்தகைய அசுத்தமான செயலில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அசுத்தமான நீரில் கழுவப்படும் காய்கறிகளை உண்பதால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் மக்கள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Virarmerijaan ⚡️ (VMJ) (@virarmerijaan)

“>

இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, உணவுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு மீதான கேள்வியை எழுப்பியுள்ளது. எனவே, வசாய்-விரார் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.