குஜராத் மாநிலம் ஜுனாகட் பகுதியில் சாலைப் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாததால் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைநீர் தேங்கியிருந்த அந்தக் குழியின் ஆழம் தெரியாமல், அவ்வழியே பைக்கில் வந்த நபர் எதிர்பாராதவிதமாக அதில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சாலைகளைச் சீரமைப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அளித்த வாக்குறுதிகள், முதல் மழையிலேயே பொய்த்துப் போனது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
गुजरात-जुनागढ-पानी से भरे गड्ढे में बाइक गिरी।
सड़क खोदने के बाद सही ढंग से मरम्मत (पैच वर्क) न होने के कारण दुर्घटना हुई।गड्ढा होने के कारण बाइक चालक गिर गया।
बाइक चालक को गंभीर चोटें आई हैं और उसे अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया है।
महानगरपालिका के काम पर उठ रहे… pic.twitter.com/M68IsbxMTu
— Dixit Soni (@DixitGujarat) July 2, 2026
“>
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலும், குழிகளைச் சரியாக மூடாமலும் அலட்சியமாகச் செயல்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
