புளோரிடாவில் உள்ள லிட்டில் பிக் எகான் மாநிலக் காட்டில், ஆற்றில் நீச்சலடித்த 31 வயதுடைய பிரிட்னி கிளார்க் என்ற பெண், ராட்சத முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 28-ம் தேதி, தனது காதலர் மற்றும் தோழியுடன் அந்த ஆற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் மூன்று அடி ஆழமுள்ள பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. முதலை முதலில் பிரிட்னியின் கையைப் பிடித்து ‘டெத் ரோல்’ எனப்படும் சுழலும் தாக்குதலை நடத்தியது.

அவரது காதலர் எவ்வளவோ முயன்றும், முதலை பிரிட்னியின் இரு கைகளையும் கடுமையாகக் காயப்படுத்தியது. பலத்த ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பிரிட்னி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்தக் கோரச் சம்பவத்தின் போது, உதவிக்காகக் காதலர் மற்றும் தோழி அழைத்த 911 அவசர அழைப்புப் பதிவுகள் அனைவரையும் உலுக்கியுள்ளன. முதலையின் பிடியிலிருந்து பிரிட்னியை மீட்க அவர் காதலர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகும், உயிர் இழப்பு நேரிட்டது.

இந்தச் சம்பவம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்; அப்பகுதியில் இருந்த 12 மற்றும் 13 அடி நீளமுள்ள இரண்டு பெரிய முதலைகள் பிடிக்கப்பட்டு, டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

“>

 

முதலினங்களின் இனப்பெருக்க காலம் மற்றும் நீர்மட்டம் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் முதலைகள் ஆக்ரோஷமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.