கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ள நிலையில், தற்போது கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிபிஐ முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
நாளை மீண்டும் விஜய் ஆஜராக உள்ள நிலையில், தற்போது வியூக வகுப்பாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தவெக வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஒரே தரப்பை குறிவைத்து மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவது ஏன்?” என விஜய் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், சிபிஐ-யின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தவெக-வின் தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்துமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
