கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான அதிர்ச்சிகரமான வழக்கின் விசாரணை இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு சிபிஐ (CBI) தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மீண்டும் விசாரணைக்காக விஜய் அவர்கள் ஆஜராக உள்ள நிலையில், ஜான் ஆரோக்கியசாமிக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது விஜய் தரப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திட்டமிட்டே தங்கள் தரப்பினருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் அக்கட்சித் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. 41 உயிர்கள் பறிபோன இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் எதை நோக்கிச் செல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
