சமூக வலைதளங்களில் புதுமையான தொழில்நுட்ப வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்களை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம், அந்த வகையில் தற்பொழுது சீனாவில் அதிவேக நெடுஞ்சாலைகளை (Highways) சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் புதிய நவீன ‘ஸ்வீப்பர் மெஷின்’ (Sweeper Machine) குறித்த வீடியோ ஒன்று ஒட்டுமொத்த உலக நெட்டிசன்களையும் மிரள வைத்து செம வைரலாகி வருகிறது.
பொதுவாக சாலைகளைச் சுத்தம் செய்யும் வாகனங்கள் மிக மெதுவாகச் செல்வதால் நெடுஞ்சாலைகளில் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படுவது வழக்கம், ஆனால் இந்த அதிநவீன சீன இயந்திரமோ எக்ஸ்பிரஸ்வேயில் செல்லும் கார்களைப் போல சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டே, சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் மிகத் துல்லியமாகச் சுத்தம் செய்துவிட்டு மின்னல் வேகத்தில் முன்னோக்கிச் செல்கிறது.
View this post on Instagram
இதனால் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி வாகனங்கள் சாதாரணமாக வந்து செல்ல முடிகிறது என்பதுதான் இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும். என்டிடிவி இந்தியா ஊடகச் செய்தியின்படி, இந்த வியப்பூட்டும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் சிலர் “அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது பணத்தை ராணுவ நடவடிக்கைகளுக்கு வாரி இறைப்பதை விட்டுவிட்டு, சீனாவைப் போல தங்களது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளில் முதலீடு செய்ய வேண்டும்” என்றும், இன்னும் சிலர் “அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற மோசமான குப்பைகள் நிறைந்த சாலைகளுக்கு இந்த இயந்திரம் மிகவும் தேவை” என்றும் கமெண்ட் செய்து இந்த எதிர்காலப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைப் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.
