திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற போடப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கூறி, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளான மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் கட்சியிலிருந்து விலகப் போவதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மாணிக்கம் தாகூர் அவர்களே நேரடியாகப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

​சமூக வலைத்தளத்தில் பரவிய அந்த வதந்தியை அப்படியே தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் டேக் செய்த மாணிக்கம் தாகூர், “அல்றசில்ற ITwing கனவு பலிக்காது கண்ணா!” என்று ரஜினி ஸ்டைலில் ஒரு மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தான் ஒரு “உண்மையான காங்கிரஸ்காரன்” என்றும், இதுபோன்ற வதந்திகள் தன்னை ஒன்றும் செய்யாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவியதாகச் சொல்லப்பட்ட சலசலப்புகளுக்கு அவர் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.