சேலம் மாவட்டத்தில், பெற்ற தாயே தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்தக் குழந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அது வெளியில் தெரியாமல் இருக்கக் குழந்தை வலிப்பு வந்து உயிரிழந்ததாக அந்தத் தாய் நாடகமாடியுள்ளார்.
மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்தத் தாய் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார்.
இறுதியில், அவரே குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தன் குழந்தையையே இரக்கமில்லாமல் கொலை செய்த அந்தத் தாயைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தன் குழந்தைக்கு எமனாக மாறிய இந்தச் சோகமான சம்பவம் ஒட்டுமொத்த சேலம் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
