“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா, ஆனா திமுகவை யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது!” என்று தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி மாறிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு சேலத்தில் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நேரு, தமிழக அரசியல் களத்தின் தற்போதைய அதிரடி மாற்றங்கள் குறித்து காரசாரமாகப் பேசினார். “அரசியல் களத்திற்குப் புதியவர்கள் வருவார்கள், பிறகு காணாமல் போவார்கள்; ஆனால் தமிழ்நாட்டில் நிரந்தரமாக இருப்பது திமுகவும், திராவிடர் கழகமும்தான்” என்று பேசிய அவர், கொள்கை அடிப்படையில் இந்த இரு இயக்கங்களும் என்றைக்கும் இணைந்தே செயல்படும் என்றார்.
மேலும், “திமுகவை ஒழிப்பேன், அழிப்போம் என்று சவால் விட்டுப் பேசியவர்களைக் கூட, தேர்தல் முடிவுகளுக்குப் பின் இன்முகத்தோடு வரவேற்கும் மாபெரும் குணம் கொண்டவர் நம்ம தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்ட நேரு, தங்களைத் தவறாக விமர்சிப்பவர்களையும் வாழ வைக்கும் ஒரு உன்னதமான இயக்கம் திமுக மட்டும்தான் எனப் பேசியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் கோட்டை முதல் அறிவாலயம் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
