பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான இணைப்பு விழாவில், பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் (TSR Srinivasan) அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைந்துள்ளார். தவெக அமைச்சர்களான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். சினிமாவில் இருந்து மேலும் ஒரு முக்கிய பிரபலம் தவெக-வை நோக்கி வந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சீனிவாசன் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான விஜயதரணி உட்பட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், நிர்வாகிகளும் இன்றைக்கு ஒட்டுமொத்தமாகத் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அடுத்தடுத்து பிற கட்சிகளில் இருந்து விக்கெட்டுகள் சரிந்து தவெக பக்கம் குவிந்து வருவதால், தற்போதைய தமிழக அரசியல் களம் செம சூடாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
