நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாணவிகள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கல்லூரி பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த மற்ற இரு மாணவிகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரின் உயிரும் பிரிந்தது. உயிரிழந்த 4 மாணவிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
