சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழையே முதன்மை வாத மொழியாக்க வேண்டும் என்ற தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் வாழ்த்தி வரவேற்றுள்ளார். பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட செம்மொம்மியான தமிழில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களின் உரிமையோடு தொடர்புடையது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, தற்போதைய இட நெருக்கடியைச் சமாளிக்கவும் எதிர்கால நிர்வாகத் தேவைகளைக் கருத்தில்கொண்டு சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்பும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேவேளையில், புதிதாகக் கட்டப்பட உள்ள இந்தச் செயலகக் கட்டடம் வெறும் நவீன வசதிகள் கொண்ட அலுவலகமாக மட்டும் இருக்கக்கூடாது என்றும், அது உலகறியும் வகையில் தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் தனித்துவமான கட்டடக் கலையையும் பறைசாற்றும் பிரம்மாண்ட அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் சிற்பக் கலை மற்றும் செட்டிநாட்டு கட்டடக் கலை போன்ற நமது பாரம்பரிய சின்னங்களின் சிறப்புகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இந்த வளாகம் வடிவமைக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. நுழைவு வாயில் முதல் சட்டமன்றப் பேரவை அரங்கம் வரை அனைத்துப் பகுதிகளும் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் தூண்கள், சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட வேண்டும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணியின் வடிவமைப்பை இறுதி செய்வதற்கு முன்பு, தமிழகத்தின் முன்னணி கட்டடக் கலை நிபுணர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று தவெக சார்பில் வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
செயலகம் நவீன உலகத் தரத்திலான வசிகளைக் கொண்டிருப்ப அதேவேளையில், அதன் முழுமையான தோற்றமும் அடையாளமும் தமிழ் பாரம்பரியத்தைக் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
தமிழை வழக்காடு மொழியாக்கும் தீர்மானத்தை வரவேற்கிறோம்.
புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா?சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாகக் கொண்டுவர ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம்… pic.twitter.com/etsBfbrSsL
— Velmurugan.T (@VelmuruganTVK) September 3, 2026
“>
தமிழ் மொழிக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் அரசின் இந்த முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும், வருங்கால சந்ததிகள் பெருமையுடன் பார்க்கும் வகையில் இந்தச் செயலகம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
