இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக (Chief of the Army Staff) லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் என்பவரை மத்திய அரசு அதிரடியாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது ராணுவத்தின் துணைத் தளபதியாக இருக்கும் இவர், கிட்டத்தட்ட 40 ஆண்டுகால ராணுவ அனுபவம் கொண்டவர். தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் உபேந்திர திவேதி வரவிருக்கும் ஜூன் 30-ஆம் தேதியுடன் தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெறுகிறார்.

​இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள தீரஜ் சேத் அதே ஜூன் 30-ஆம் தேதி மதியத்திற்கு மேல் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்புப் படை, பாலைவனப் பகுதி மற்றும் மேற்கு தியேட்டர்களில் கமாண்டராகப் பணியாற்றிய அசுர அனுபவம் கொண்ட இவரின் இந்த புதிய நியமனம், இந்திய பாதுகாப்புத் துறையில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.