தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் அரசியல் வருகையும், அவரது திரைப்படங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த பலரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூழலில், தற்போதைய சூழலில் விஜய் அவர்கள் நடித்த திரைப்படத்திற்கு எதிராகவும் மறைமுகப் போராட்டங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எம்பி ஆ.ராசா அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவர் பேசுகையில், “ஜனகனமன” என்று சொல்வதற்குப் பதிலாக, “ஜனநாயகன்” என்று கூற முயன்று தடுமாறியுள்ளார்.
ஆ.ராசா பாராளுமன்றத்தில் பேசிய இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் இணையவாசிகள், “திமுகவினர் வெளியே எவ்வளவுதான் எதிர்த்தாலும், பாராளுமன்றத்திற்குச் சென்றால் கூட அவர்கள் வாயில் விஜய் அவர்களின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் வருகிறது” என்று கிண்டலாகவும் நக்கலுடனும் கமெண்ட்களைப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
பாராளுமன்றத்துல போயும் 'ஜனநாயகன்' நெனைப்புல தான் இருக்கானுங்க 😂 pic.twitter.com/peamHsgAAz
— ஆட்டோக்காரன் 🛺 (@Rajesh_Lms) July 30, 2026
விஜய் நடித்துள்ள திரைப்படத்திற்கு எதிராக ஒருபுறம் கருத்துகள் பேசப்பட்டாலும், நாடாளுமன்ற மேடையிலேயே எம்பி ஆ.ராசாவின் வாயில் அப்பெயர் வந்தது விஜய் எஃபெக்ட் தான் என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் பெருமளவில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
