தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வளர்ச்சியைப் பார்த்து மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலர் தவெக நோக்கி படையெடுத்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவில் தற்பொழுது ஒரு மிகப்பெரிய அதிரடி விக்கெட் விழுந்துள்ளது. அதிமுகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இலத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ஓஎம் சுரேஷ், தனது தாய் கட்சியை விட்டு விலகி இன்று அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைந்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (MLA) மரகதம் குமரவேல் முன்னிலையில், தவெக செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் மோகன் ராஜா தலைமையில் இந்த அதிகாரப்பூர்வ இணைப்பு விழா மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு பகுதியில் தங்களது கட்சிப் பலத்தை கணிசமாக உயர்த்திக் காட்டும் நோக்கில், அதிமுகவின் முக்கியப் பகுதி நிர்வாகியைத் தவெக தங்கள் பக்கம் இழுத்துள்ள இந்த அதிரடி அரசியல் நகர்வு, மாவட்ட அதிமுக தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, சோசியல் மீடியா ஏரியாக்களிலும் செம ட்ரெண்டாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.