சமூக வலைதளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட செல்லப்பிராணிகளின் கியூட்டான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம், அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தற்பொழுது வெளியாகி பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒரு பூனையின் ‘லவ் பிரேக்கப்’ வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து செம ட்ரெண்டாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் @chambal_ke_dhakad_2.0 என்ற கணக்கில் பகிரப்பட்டு, தற்பொழுது 1 கோடிக்கும் அதிகமான வியூஸ்களையும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளி வரும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், ஆண் பூனை (போகா) ஒன்று தனக்குப் பிடித்த பெண் பூனை மீதுள்ள காதலை வெளிப்படுத்துவதற்காக, தான் வேட்டையாடிய ஒரு சிறிய எலியைப் பரிசாகத் தனது வாயில் கவ்விக்கொண்டு மிகுந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் நடந்து செல்கிறது. ஆனால், அந்தப் பூனைக்கு அடுத்த சில நொடிகளில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Chambal ke Dhakad (@chambal_ke_dhakad_2.0)

அந்தப் பெண் பூனை வேறொரு கருப்பு வெள்ளைப் பூனையுடன் நெருக்கமாகத் தனது காதலில் மூழ்கியிருக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான காதல் காட்சியை இந்த ஆண் பூனை நேரில் பார்க்கிறது. இதைப் பார்த்ததும் ஒட்டுமொத்தமாக இதயம் உடைந்த அந்த ஆண் பூனை, திகைத்துப்போய் வாயில் இருந்த எலியை அப்படியே தரையில் போட்டுவிட்டு, அதற்கு உயிர் பிச்சை அளித்துவிட்டு, எவ்வித சத்தமும் போடாமல் அமைதியாகப் பின்வாங்கி நெகிழ்ச்சியுடன் அங்கிருந்து திரும்பிச் செல்கிறது.

பிராணிகளின் உணர்வுகளை மனிதர்களோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த ஆண் பூனையின் உடல் மொழியிலும், முகத்திலும் தெரிந்த ஏமாற்றமும், அமைதியான சோகமும் பார்ப்பதற்கு அச்சு அசலாக மனிதர்களின் காதல் தோல்வியைப் போலவே மிக இயற்கையாக இருந்ததால், இந்த “சைலண்ட் ஹார்ட்பிரேக்” தருணத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “பாவம், இந்த பூனை பிரண்ட்ஸோன் ஆகிவிட்டது”, “உண்மையான காதலர்களுக்குத்தான் இந்தத் துயரம் புரியும்” என்று தங்களது எமோஷனலான கருத்துக்களைப் பதிவிட்டு இந்த வீடியோவை இணையத்தில் காட்டுத்தீயாய் பகிர்ந்து வருகின்றனர்.