சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை உறைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ ஒன்று பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்த உறைவு (Brain Blood Clot) காரணமாக பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் உயிரிழப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னால், தனக்கு முன்னால் யாரோ ஒரு நபர் நேரில் வந்து நிற்பது போலவும், அவரிடம் பேசுவது போலவும் மிகவும் விசித்திரமாக ரியாக்ட் செய்துள்ளார். அந்த இறுதி நொடிக் காட்சியின் எமோஷனலான வீடியோ வெளியாகி தற்போது நெட்டிசன்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.
Vietnamlı bir kadın beyindeki kan pıhtısı nedeniyle hayatını kaybetti.
Ölmeden önce, kan pıhtısının etkisiyle sanki birini görüyormuş gibi davranması, Azrail’i (ölüm meleği)’nin gelişi olarak sosyal medyada yorumlandı… https://t.co/Zhr0VzIvVW
— Anında (@anindanet) June 12, 2026
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மத்தியில் தற்போது பெரும் விவாதம் வெடித்துள்ளது. அறிவியல் ரீதியாக சிந்திக்கும் சிலர், “மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்படும் ஒருவித பிரம்மை (Hallucination) தான் இது” என்று கூறி வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ, “அவங்களுக்கு ‘அவர்’ நேர்ல தெரிஞ்சாரா?.. மரணத்தின் விளிம்பில் அந்தப் பெண் நிச்சயம் எமனைத்தான் நேரில் பார்த்திருக்க வேண்டும்” என்று உணர்வுபூர்வமாகக் கூறி வருகின்றனர். எது எப்படியோ, இந்த பகீர் வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
