இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அள்ளி ரீல்ஸ்களில் பிரபலமடைவதற்காக மக்கள் விதவிதமான இடங்களைத் தேடி அலைந்து வரும் நிலையில், நடுரோட்டையே ஸ்டுடியோவாக மாற்றி தம்பதி ஒருவர் செய்துள்ள அலப்பறை தற்பொழுது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் @skgupta_27 என்ற கணக்கில் பகிரப்பட்டு தற்பொழுது லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வரும் இந்த வைரல் வீடியோவில், பெண் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு மேம்பாலத்தின் (Flyover) மீது நின்று கொண்டு எவ்வித அச்சமும் இன்றி முழு நம்பிக்கையுடன் கேமரா முன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது கணவரே அவருக்கு கேமராமேனாக மாறி அந்த வீடியோவை ரீல்ஸாகத் தனது மொபைலில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

பொதுமக்களுக்குப் இடையூறு விளைவிக்கும் வகையில் மேம்பாலத்தில் நின்று கொண்டு இவர்கள் ரீல்ஸ் செய்த இந்த காட்சியை, அந்த வழியாகச் சென்ற மற்றொரு நபர் தனது மொபைலில் ரகசியமாகப் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களது கருத்துக்களை மோதி வருகின்றனர்.

ஒரு தரப்பினர் “நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் இப்படி ரீல்ஸ் எடுப்பது மற்றவர்களுக்குப் பெரும் தொந்தரவு, சோசியல் மீடியா மோகத்தால் மக்கள் எங்கு வீடியோ எடுக்கிறோம் என்ற விவஸ்தையே இல்லாமல் அலட்சியமாகச் செயல்படுகிறார்கள்” என்று வறுத்தெடுத்து வரும் வேளையில், மற்றொரு தரப்பினரோ “அவர்கள் யாருக்கும் தொந்தரவு தராமல் தங்களது சொந்த கன்டென்ட்டைத் தானே உருவாக்குகிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று அந்த தம்பதிக்கு ஆதரவாகவும் கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருவதால் இந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டாகி வருகிறது.