தமிழகக் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழா 4-வது ஆண்டாக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குத் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நேரில் கலந்துகொண்டு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்.
இந்த விழாவைச் சிறப்பான முறையில் நடத்துவதற்காக, மாநிலம் முழுவதிலும் உள்ள தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளின் முழுமையான விபரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்குமாறு தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலைமை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவெகவின் இந்தத் தொடர் முயற்சி கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
