அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்த டைலர் பிராட்ஸ்கி என்ற தந்தை, தனது இரண்டு சிறு மகள்களுடன் கார் பயணம் மேற்கொண்ட போது, அலபாமா என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிலைய கழிவறைக்குச் சென்றுள்ளார்.

ஆண்கள் கழிவறை மிகவும் அழுக்காகவும், பெரிய ஆண்கள் கூட்டம் இருந்ததாலும், தனது பெண் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதி, யாருமில்லாத பெண்கள் கழிவறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

இதைப் பார்த்த மற்றொரு வாடிக்கையாளர், ஒரு ஆண் எப்படி பெண்கள் கழிவறைக்குள் வரலாம் என்று சண்டை போட்டு, போலீசுக்கும் போன் செய்துள்ளார்.

இந்த சத்தத்தைக் கேட்டு அந்தச் சிறுமிகள் பயந்து அழத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மூன்று போலீஸ் அதிகாரிகள், அந்தத் தந்தை செய்தது தவறில்லை என்று கூறி, தேவையில்லாமல் சண்டை போட்ட நபரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, பொது இடங்களில் தங்களின் பெண் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் தந்தையர்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.