தவெக அரசுக்கு எதிராகப் அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பி விஜய் தலைமையிலான தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது ஆட்சியில் பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சாடியுள்ள அண்ணாமலை, தவெக அரசு உடனடியாகத் தங்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்த அறிக்கை, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.