பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (Sterling Resort) நடைபெற்ற திருமண விழாவில் அரங்கேறிய இந்தக் கொள்ளை சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிரவைத்துள்ளது.

ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகள் திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் ‘ஷகுன்’ (Shagun) சடங்கின் போதுதான் இந்தத் துணிகரம் நடந்துள்ளது.

அமிர்தசரஸில் இருந்து வந்திருந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர், சடங்குகள் முடிந்து சிறிது நேரம் கவனக்குறைவாக இருந்தபோது, அங்கிருந்த நாற்காலியில் ஒரு பையை வைத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by True Scoop (@truescoop)

அப்போது வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட் அணிந்து சர்வர் போல வேடமிட்டு உள்ளே நுழைந்த நபர், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தப் பையைச் சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

அந்தப் பையில் 400 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சடங்குகள் முடிந்து பையைத் தேடியபோது அது காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சோதித்தபோதுதான் அந்த ‘வேலைக்கார’ திருடனின் கைவரிசை அம்பலமானது.