ஓடும் ரயிலைப் பிடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. கான்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் ரயிலின் இன்ஜின் கேபின் (Loco Pilot Cabin) வழியாக உள்ளே நுழைய முயன்றார். வந்தே பாரத் ரயிலின் கதவுகள் தானாகவே மூடப்பட்டுவிடும் என்பதால், அவர் இன்ஜின் பகுதியைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரயில் வேகம் எடுத்ததால் கால் தடுமாறி அந்த நபர் நடைமேடைக்கும் (Platform), ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்தார்.

இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அவர் ரயிலின் அடியில் சிக்கி உடல் சிதறி இருப்பார். ஆனால், அங்குக் கடமையில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர், இமைக்கும் நேரத்தில் சிறுத்தையைப் போலப் பாய்ந்து அந்த நபரின் கையைப் பிடித்து வெளியே இழுத்தார்.

நூலிழையில் உயிர் தப்பிய அந்தப் பயணியும், அங்கிருந்த பொதுமக்களும் அந்த வீரரின் சமயோசித புத்தியைப் பாராட்டி வருகின்றனர். இந்தத் திக் திக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.