கனடா நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மலையேற்றம் (Hiking) சென்ற ஒரு பெண்ணையும், அவரது வளர்ப்பு நாயையும் மாபெரும் கிரிஸ்லி கரடி ஒன்று ஒற்றையடிப் பாதையில் கொடூரமாகப் பின்தொடர்ந்து வேட்டையாட முயன்ற நெஞ்சை பதறவைக்கும் திக் திக் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் உறைந்துபோக வைத்துள்ளது. சுமார் 320 கிலோவிற்கும் அதிக எடையும், மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய வல்லமையும் கொண்ட வட அமெரிக்காவின் மிக ஆபத்தான கிரிஸ்லி கரடி ஒன்று, அந்தப் பெண்ணை நோக்கி மிகக் குறைந்த தூரத்தில் நெருங்கி வந்துள்ளது.
கரடி தன்னை நோக்கி வருவதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தப் பெண் மிகவும் சாதுரியமாகத் தனது பார்வையை கரடியின் மீது வைத்தபடியே மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்துள்ளார். “நோ.. கோ அவே” (No, go away) என்று கடுமையான குரலில் கத்தி கரடியை விரட்ட முயன்ற போதிலும், அந்த மிருகம் திடீரென ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்து பெண்ணையும், நாயையும் தாக்க முயன்றுள்ளது. மரண பயத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண், தொடர்ந்து “ஸ்டாப் இட்” (Stop it) என்று கத்தியபடியே பின்வாங்கியுள்ளார்.
A woman hiking in Canada nearly became a grizzly’s next meal and the video circulating right now is genuinely one of the most intense wildlife encounters you will ever watch – her dog is with her, a massive grizzly is right there, and somehow she kept her head together long… pic.twitter.com/VutSzXLeXM
— Tony Lane 🇺🇸 (@TonyLaneNV) June 26, 2026
பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணின் அசாத்திய தைரியத்தைக் கண்டு கரடி திடீரெனப் பின்வாங்கி காட்டுக்குள் மறைந்துள்ளது. இந்த திகிலூட்டும் காட்சியை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள சுதந்திர விமர்சகர் டோனி லேனர், “கரடி வாழும் காட்டுப் பகுதிக்குச் செல்வோர் கண்டிப்பாக ‘பியர் ஸ்ப்ரே’ (Bear Spray) வைத்திருக்க வேண்டும், அதுவே உங்கள் உயிரைக் காக்கும்” என்று எச்சரித்துள்ளார். இந்த நடுக்கமூட்டும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மில்லியன் கணக்கான வியூஸ்களைக் குவித்து வைரலாகி வருகிறது.
