ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல பள்ளியில் நடந்த ஒரு சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ‘லிட்டில் கார்டன்’ பள்ளியில் LKG பயின்று வந்த 6 வயது சிறுவன் பிரணய் தேஜ், தன் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுவனைத் தாக்கியதாகத் தெரிகிறது.

ஆசிரியரின் நடவடிக்கையால் கடும் அச்சமடைந்த சிறுவன், திடீரெனப் பயந்துபோய் அழுதுள்ளான். அப்போது அவனுக்குத் தொடர் இருமலும் ஏற்பட்டுள்ளதுடன், நிலை தடுமாறி ஆசிரியரின் மீதே மயங்கிச் சரிந்துள்ளான்.

உடனடியாகச் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

“>

 

தங்களது மகனின் திடீர் மறைவு குறித்துச் சந்தேகம் அடைந்த பெற்றோரும் உறவினர்களும், பள்ளிக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வகுப்பறையில் நடந்த சம்பவங்களைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பள்ளியின் முன்பு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.