கேரளாவில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட 13 வயது சிறுமி, தனது சொந்தத் தாத்தாவைக் கூலிப்படை மூலம் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருவத்தா பகுதியைச் சேர்ந்தவர் 74 வயது சிவன்குட்டி. இவருடன் வசித்து வந்த இவரது உறவுமுறை பேத்தியான 13 வயது சிறுமிக்கு ஐபோன் மற்றும் பைக் வாங்குவதில் தீவிர ஆசை இருந்துள்ளது. இதனால் பணத்திற்கும் நகைகளுக்கும் ஆசைப்பட்ட அந்தச் சிறுமி, தனது 3 நண்பர்களின் உதவியுடன் தாத்தாவைக் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளாள்.

சிவன்குட்டியின் மனைவியும் அந்தச் சிறுமியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில், அந்த 3 சிறுவர்களும் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், தாத்தா சிவன்குட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். மிகவும் திடுக்கிடும் வகையில் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய அந்தச் சிறுவர்கள், அதைக் கைப்பேசியில் வீடியோ கால் மூலம் அந்தச் சிறுமிக்கு நேரலை செய்து காட்டியுள்ளனர். அதன்பிறகு மறுநாள் எந்தவித பயமும் இன்றி, வழக்கம்போல் இயல்பாக நடந்துகொண்டுள்ளார் அந்தச் சிறுமி.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகம் அடைந்து தீவிரமாக விசாரித்தனர்.

“>

 

விசாரணையில் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதையடுத்து சிறுமியைக் கைது செய்த காவல்துறையினர், அவளிடமிருந்து 6 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.