டெல்லி மருத்துவமனை ஒன்றில், கடுமையான உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த 16 வயது சிறுவனுக்குப் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் சுமார் 275 கிலோ எடையுடன் தீவிர உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இவரது பாடி மாஸ் இன்டெக்ஸ் கிட்டத்தட்ட 100-ஐ எட்டியிருந்த நிலையில், இவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல், தூக்கமின்மை மற்றும் தோல் தொற்றுகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.

“>

 

உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால், சிறுவனால் சாதாரணக் காரில் கூட உட்கார முடியவில்லை. இதனையடுத்து, ஒரு வேன் மூலம் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவனுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை மேற்கொண்டு பாரியாட்ரிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.