நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் ஒரு வீரரே, தனது வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை இவ்வளவு கொடூரமாகத் சித்திரவதை செய்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் தங்கியிருந்த ஒரு வீரரும், அவரது மனைவியும் சேர்ந்து, மனைவியின் உடன்பிறந்தவர் மகளை (Niece) வீட்டு வேலை செய்யச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
அந்தச் சிறுமி குளிக்கும்போது கீழே விழுந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். சிறுமியின் உடலில் ரத்தம் (Hemoglobin) வெறும் 1.9 மட்டுமே இருந்துள்ளது.
அதுமட்டுமின்றி, விலா எலும்புகள் முறிக்கப்பட்டு, பற்கள் உடைக்கப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு என அந்தப் பிஞ்சு உடலை அவர்கள் சிதைத்துள்ளனர்.
தற்போது அந்தச் சிறுமி வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார். இதையடுத்து, அந்த சிஆர்பிஎஃப் வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, தம்பதி இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
