ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குள் சந்தேகத்திற்கு இடமாகப் பெரிய சூட்கேஸ் ஒன்றை இழுத்துக்கொண்டு சென்ற கர்பிணி வேகமாகச் செல்கிறார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாதுகாப்புப் படையினரும் போலீசாரும், உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து அந்த சூட்கேஸை திறக்கச் சொல்கிறார்கள்.
மேலும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையால் அந்த பெண் சூட்கேஸை திறக்க, உள்ளே ஒரு சிறுமி சுருண்டு படுத்துக் கிடப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துள்ளனர். “போலீசாரின் சந்தேகம் முற்றிலும் உண்மை! இணையத்தில் இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
The police’s suspicion was absolutely correct! Watch until the end. https://t.co/WhQoteKxrw
“>
ஆனால், இந்த பரபரப்பான வீடியோவிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான பின்னணி என்னவென்று ஆராய்ந்த போதுதான் அதிர்ச்சியான ட்விஸ்ட் வெளிவந்தது. உண்மையில் இது நிஜமாக நடந்த கடத்தல் சம்பவம் அல்ல! இன்றைய காலகட்டத்தில் குழந்தைக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் எவ்வளவு தந்திரமாக நடக்கிறது என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு காட்சியாகும்.
இந்நிலையில் மால் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எவ்வளவு எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் இந்த வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
