கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தை, தனது ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் காமெடியாகப் பயன்படுத்திய நடிகர் ஜீவா இப்போது சிக்கலில் மாட்டியுள்ளார்.

படத்தில் அமைச்சர் பேசிய வசனத்தைக் கிண்டல் செய்துள்ள ஜீவா, நிஜ வாழ்க்கையில் தான் நடந்துகொண்ட விதத்திற்காகக் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு ஜீவா தனது மனைவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அப்போது அவரிடம் செல்ஃபி எடுக்க வந்த ஒருவரை, “இங்க என்ன நடந்திருக்கு.. ” எனப் பச்சையாகக் கெட்ட வார்த்தையில் ஜீவா திட்டிய வீடியோ அப்போது வைரலானது.

“உங்க குடும்பம் ஒரு சின்ன விபத்தில் சிக்கிய போதே உங்களுக்கு அவ்வளவு கோபம் வருகிறதே.. ஆனால் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தை வைத்துப் படத்தில் காமெடி செய்வது எந்த விதத்தில் நியாயம்?” என நெட்டிசன்கள் ஜீவாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

“உங்களுக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா?” எனச் சமூக வலைதளங்களில் ஜீவாவுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிகின்றன.