ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இதில் யாரும் இடையில் புகுந்து தலையிட முடியாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சென்சார் தரப்பால் இதுபோன்று எத்தனையோ படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது புதிதாகக் கட்சி தொடங்கியிருப்பதால்தான், இந்த விவகாரம் தேவையற்ற முக்கியத்துவம் பெற்று வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.