பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம், ஆனால் அது அவரது அரசியல் எதிர்காலத்தையே முடித்துவிடும் என்று காங்கிரஸ் எம்பி கபில் சிபல் எச்சரித்துள்ளார்.

பொதுவாக தாங்கள் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பாஜக, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கட்சிகளைப் புறக்கணிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாகவும், தமிழகத்திலும் அதே தந்திரத்தை அவர்கள் கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யை எப்படியாவது NDA கூட்டணிக்குள் இழுக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், கபில் சிபலின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும் விஜய்யின் கட்சிக்கு இது ஒரு முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.