மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தங்களை ஆன்மீக குரு மற்றும் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பக்தியின் பெயரால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் இன்ஜினியரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த ‘மிஸ்ரா பாபா’ என்ற போலி சாமியார் அவரது 6 பெண் சீடர்கள் மற்றும் ஒரு ஆண் சீடருடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள விபரீத அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் நாடு முழுவதிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது.
குடும்பப் பிரச்சினை மற்றும் பணக் கஷ்டங்களைத் தீர்ப்பதாகக் கூறி பெண்களைத் தனது ஆசிரமத்திற்கு வரவழைத்து அராஜகப் பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வந்த இந்த போலி சாமியாரின் வசிப்பிடத்தில் புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய மின்னல் வேக மெகா சோதனையில், தப்பி ஓடுவதற்காக ரகசியமாக அமைக்கப்பட்டு வந்த நிலத்தடி சுரங்கப்பாதை (Underground Tunnel), 12 லேப்டாப்கள், 11 மொபைல்கள், 23 பென்டிரைவ்கள், 10 துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் 21.5 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகள் மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 41 வயது பெண் இன்ஜினியர் போலீசில் அளித்துள்ள நெஞ்சை உலுக்கும் புகாரில், தன்னை 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டிய அறைக்குள் சிசிடிவி (CCTV) மூலம் கண்காணித்து, ரகசிய வீடியோக்களை எடுத்து, ஒருகட்டத்தில் தனக்குக் கட்டாயப்படுத்திச் சிறுநீரைக் குடிக்க வைத்ததுடன், பேச்சைக் கேட்காத போது மிகக் கொடூரமாக மின்சார ஷாக் (Electric Shock) கொடுத்து தேர்ட் டிகிரி டார்ச்சர் செய்ததாகவும், இதிலிருந்து தப்பிக்கத் தான் திருமணம் செய்து கொண்ட போது தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறவும், சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றவும் அந்தப் சாமியார் மிரட்டியதாகத் தனது அடுக்கடுக்கான குமுறல்களைப் போட்டுடைத்துள்ளார்.
மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்த விபரீதப் போலி பாபாவின் கொடூரச் செயல் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி, “பக்தியை நம்பிப் போன பெண்ணை இப்படியா மிருகத்தனமா டார்ச்சர் பண்ணுவீங்க.. இந்த போலி சாமியாருக்கும் அவனோட கூட்டத்துக்கும் கடுமையான தண்டனை கொடுக்கணும்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் அனல் பறக்கும் கண்டனக் குரல்களுடன் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
