பொதுவாகச் சாலை ஓரங்களில் விற்கப்படும் பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் டப்களுக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு கடைக்காரர் தனது தயாரிப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அந்த வீடியோவில், பிளாஸ்டிக் டப் ஒன்றை தரையில் வைத்து, அதன் மேல் ராட்சத ஜேசிபி வாகனத்தின் டயரை ஏற்றச் சொல்கிறார் அந்த நபர். ஜேசிபி ஏறியதும் டப் முழுமையாக நசுங்குகிறது.
इस टब को बनाने वाला पक्का अल्ट्रा-लेवल इंजीनियर होगा
भाई साहब ऐसी गारंटी तो शादी की भी नहीं होती जितनी इस टब की है
क्रेन का टायर थक गया पर टब टस से मस नहीं हुआ।इसे कहते हैं असली मेड इन इंडिया पावर pic.twitter.com/EFNIamDjgv
— Raja yadav (@rajayadav47) January 18, 2026
ஆனால், வாகனம் நகர்ந்தவுடன் அந்த டப்பை எடுத்துத் தனது காலால் ஒரு தட்டுத் தட்டுகிறார். அடுத்த நொடியே அந்த டப் மீண்டும் தனது பழைய வடிவத்திற்குத் திரும்புகிறது.
இத்தனைக்கும் அந்த டப்பில் ஒரு கீறல் கூட விழவில்லை. “இதுதான் உண்மையான மேட் இன் இந்தியா பவர்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 52 வினாடி வீடியோ, இதுவரை ஆயிரக்கணக்கானோரைக் கவர்ந்துள்ளது.
