திறமை என்பது காசுக்கோ, வசதிக்கோ சொந்தமானது அல்ல என்பதற்கு இந்த சிறுமியே சாட்சி. சாலையில் பலூன் விற்று பிழைப்பு நடத்தும் அந்த சிறுமி, திடீரென ஒலித்த பாடலுக்கு ஆடிய நடனம் இப்போது நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு நிகழ்ச்சியின் நுழைவு வாயில் அருகே இரண்டு சிறுமிகள் பலூன் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by ཚེ་རིང་དབང་མོ་ (@wangmos_lifestyle_)

அப்போது உள்ளே ‘ஷராரா.. ஷராரா..’ (Sharara Sharara) பாடல் ஒலிக்கிறது. அதைக் கேட்டதும் ஒரு சிறுமிக்கு ஆர்வம் தாங்கவில்லை. முதலில் கொஞ்சம் தயங்கி வெட்கப்பட்டாலும், அடுத்த நொடி அந்தப் பாடலுக்கு அவர் போட்ட ஸ்டெப்கள் அச்சு அசலாக ஒரு தேர்ந்த நடனக் கலைஞரைப் போலவே இருந்தது. அந்தச் சிறுமியின் முகபாவனைகளும், நடன அசைவுகளும் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.