பொங்கல் பண்டிகை என்றாலே அது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உறவுகளின் சங்கமமும் கூட. அதிலும் குறிப்பாக, ஒரு தம்பி தன் அக்கா-தங்கைக்குக் கொடுக்கும் ‘சீர்’ என்பது வெறும் பணமோ பொருளோ கிடையாது; அது அவர்கள் மீது வைத்திருக்கும் அளவில்லாத அன்பு. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வயதான தாத்தா ஒருவர் தன் சகோதரிக்குத் தன்னால் முடிந்த சீர் வரிசையைக் கொடுக்கிறார்.
இத்தனை வயசு ஆனாலும் நமக்காக ஒருத்தன் இருக்கான் காட்றது தான் பொங்கல் சீர் பணம் காசு முக்கியம் இல்ல.
கூட பிறந்தவன் ஒத்த ரூபா கொடுத்தாலும் அத பெருசா பாருங்க..தம்பி என்ன கொடுத்தாலும் வாங்குற அக்கா மனசு, அக்கா கிட்ட கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குற தம்பி மனசு 🥰 கிரேட் 🔥 pic.twitter.com/RQ2wp7u9C3
— மெட்ராஸ் பையன் (@madraspaiyanda) January 17, 2026
பெரிய தொகை இல்லையென்றாலும், ஒரு தம்பியாகத் தன் கடமையைச் செய்துவிட்டு, தன் அக்காவின் காலில் விழுந்து அவர் ஆசி வாங்குகிறார். இதைப் பார்க்கும்போது, “பணம் காசை விடப் பாசம்தான் பெருசு” என்பது மீண்டும் நிரூபணமாகிறது. உடன்பிறந்தவர்களுடன் சண்டையிட்டுப் பிரிந்து கிடக்கும் பலருக்கு, இந்த வீடியோ ஒரு பெரிய பாடமாகவும், நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது.
