சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணவன் – மனைவிக்கு இடையே நடக்கும் செல்லச் சண்டைகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி நெட்டிசன்களைக் கவர்ந்து வரும் நிலையில், தற்பொழுது விமானப் பயணத்தின் போது விண்டோ சீட்டுக்காக (Window Seat) தம்பதியரிடையே நடந்த ஒரு க்யூட்டான சண்டை வீடியோ இணையத்தில் செம வைரலாகி பலரையும் ரசிக்க வைத்து வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், கணவனுக்கு ஒதுக்கப்பட்ட விண்டோ சீட்டை அவரது மனைவி அடம் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டு அமர்ந்து கொள்ள, அந்தச் சீட்டைத் திரும்பப் பெற அந்த கணவன் எவ்வளவோ போராடிப் பார்க்கிறான். ஆனால், மனைவி அசருவதாகத் தெரியாததால், வேறு வழியில்லாமல் நடுவானில் பறக்கும் அந்த விமானத்தில் பஞ்சாயத்து செய்ய ஏர் ஹோஸ்டஸை (விமானப் பணிப்பெண்) உதவிக்கு அழைக்கிறான்; அங்கு வந்த ஏர் ஹோஸ்டஸும் சிரித்துக் கொண்டே இருவருக்கும் இடையே சமரசம் செய்ய முயல்கிறார்.
Window Seat के लिए पति ने Air Hostess तक से शिकायत कर दी😭😂
लेकिन Wife ने seat देने से साफ इंकार कर दिया। pic.twitter.com/JpdfTjSKj8
— Jamal | Viral desk (@jamalk38) June 10, 2026
ஆனால், அந்த மனைவியோ தனது முடிவில் அம்புட்டு ஸ்ட்ராங்காக இருந்து சீட்டை விட்டு எழ மறுக்க, கடைசியில் அந்தப் பாசக்காரக் கணவன் வேறு வழியில்லாமல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாகி விடுகிறான்.
இந்த வேடிக்கையான வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களைக் கடந்துள்ளதோடு, “இது வெறும் சீட் சண்டை இல்லை பாஸ்.. உலகத்தில் இருக்குற எல்லா திருமண வாழ்க்கையிலும் நடக்குற ஒரு எதார்த்தமான கதை” என்றும், “பாவம் அந்த ஏர் ஹோஸ்டஸ், வீட்டுப் பஞ்சாயத்தை அவங்க எப்படித் தீர்த்து வைப்பாங்க?” என்றும் நெட்டிசன்கள் தங்களது வேடிக்கையான கமெண்ட்களைப் பகிர்ந்து இந்த வீடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
