இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு உடை மாற்றுவதற்காக பிரத்யேக அறை வழங்கப்பட உள்ளதற்கான சுவாரசியமான காரணம் வெளியாகியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது அயர்லாந்து சென்றுள்ளது. வரும் ஜூன் 26 அன்று தொடங்கவுள்ள இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அணியுடன் 15 வயதே ஆன இளம் இடதுகை பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியும் இணைந்துள்ளார்.
அதோடு அவர் இன்னும் 18 வயது பூர்த்தி அடையாத ஒரு மைனர் என்பதால், சட்ட விதிகளின்படி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரியவர்களுக்கான பொதுவான உடை மாற்றும் அறையை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.
இதன் காரணமாகவே, அவருக்கு உடை மாற்றுவதற்கும் மற்ற தேவைகளுக்கும் என மைதானங்களில் ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மிகக் குறைந்த வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கான இந்த சிறப்பு ஏற்பாடு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
