டெல்லியில் நடைபெற்ற ஒரு தனியார் செய்தி ஊடக நிகழ்ச்சியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் முக்கியத்துவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது இன்றைய நவீன ‘ஜென் ஜி’ தலைமுறை இளைஞர்களைப் பற்றிப் பேசும்போது, இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரைப் பிரதமர் மோடி குறிப்பிட்டுக் பாராட்டினார். “நம் நாட்டு இளைஞர்கள் தாங்கள் யார் என்பதை விரைவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

“>

அதோடு நமது ஜென் ஜி இளைஞர்கள் இதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறார்களோ அவ்வளவு நல்லது. ஒருவேளை அவர்கள் இதைப் புரிந்துகொள்ளத் தவறினால், அவர்களை விட வேகமாக விஷயங்களை அவர்களுக்குப் புரிய வைக்க ‘இப்போது வைபவ் சூர்யவன்ஷி வந்துவிட்டார்’ என்று கிரிக்கெட் பாணியில் பிரதமர் நகைச்சுவையாகவும் பெருமையாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து பிரதமரின் இந்த சுவாரசியமான பேச்சைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் பலத்த கைதட்டல் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தனது உரையில், வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மைதானத்தில் தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சாளர்களைத் திணறடித்து அதிரடியாக விளையாடுவதை ஒரு சிறந்த உதாரணமாகக் கையாண்டார்.

மேலும் ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, அசுர வேகத்தில் ரன்களைக் குவித்து பல சாதனைகளை முறியடித்ததன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். மிகக் குறைந்த வயதிலேயே தனது அசாத்திய திறமையால் இந்திய ஏ அணியிலும் இடம் பிடித்து, சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் விளையாட்டுத் துறையில் அதிவேகமாக முன்னேறி வரும் இந்த 14 வயது இளம் வீரரின் அதிரடி ஆட்டத்தையும் அவரது வேகத்தையும் நாட்டின் பிரதமர் ஒரு பொது மேடையில் பாராட்டிய இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.